குறைந்த வருமானம் பெறுவோருக்கான கொடுப்பனவு... வெளியான புதிய தகவல்!
இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

24 இலட்சம் பயனாளிகளுக்கு அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் மார்ச் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
அஸ்வெசும கொடுப்பனவுக்கு கடந்த முறை தெரிவு செய்யப்படாத நிலையில், மேன்முறையீட்டு செய்யாதவர்கள் மற்றும் முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறாதவர்களுக்கும் மீண்டும் தகவல் உறுதி செய்ய அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உதவித்தொகை பெற தகுதியானவர்களை தேர்வு செய்யும் முறையின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் அளவுகோலின் கீழ் அனைத்து விண்ணப்பங்களும் சமமாக பரிசீலிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
இதேவேளை, நோயாளிகளுக்கான கொடுப்பனவு 7500 ரூபாயாகவும் முதியோர் கொடுப்பனவை 3000 ரூபாயாகவும் கடந்த மாதம் முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.