ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செப். 4 ஆரம்பம்

2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 22, 2024 - 14:07
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செப். 4 ஆரம்பம்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், தமது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கான திகதி தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி தபால்மூல வாக்குகளைப் பதிவு செய்ய தேர்தல் திணைக்களத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், செப்டெம்பர் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் ஏனைய திணைக்கள அரச உத்தியோகத்தர்கள் தமது திணைக்களங்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தினங்களில் வாக்களிக்கத் தவறும் அரச உத்தியோகத்தர்கள், செப்டெம்பர்  எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் தத்தமது மாவட்டத் தேர்தல் திணைக்களத்தில் வாக்களப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!