முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 236 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களைப் பெற்றது.
122 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 326 ஓட்டங்களைப் பெற்று இங்கிலாந்து அணிக்கு 205 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொடுத்தது.
இறுதியில் இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.