கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.