அரச வைத்தியசாலைகளுக்கு தனியார் மருந்தகங்களில் மருந்து கொள்வனவு

பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜுன் 15, 2022 - 11:55
அரச வைத்தியசாலைகளுக்கு தனியார் மருந்தகங்களில் மருந்து கொள்வனவு

தனியார் மருந்தகங்களில் இருந்து அரச வைத்தியசாலைகளுக்கு தற்போது மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவசர விபத்து ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவருக்கு சாதாரண சேலைனை வழங்குவதற்கு வெளித் தரப்பினரை நாடவேண்டிய நிலை உள்ளதாகவும் இது நகர மற்றும் கிராமம் என்ற வித்தியாசமின்றி, அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த நிலை உள்ளதான அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பெருமளவான கிராமப்புற வைத்தியசாலைகளில் சாதாரண சேலைன்களின் கையிருப்பு முடிவடைந்துள்ளதாக மஞ்சுள ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!