அரச ஊழியர்களின் சம்பளம் 15,750 ரூபாயினால் அதிகரிப்பு
அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாயினால் அதிகரிக்க வரவு- செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாயினால் அதிகரிக்க வரவு- செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருடாந்த சம்பள அதிகரிப்பு 60 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரச சேவையின் அடிப்படை சம்பளம் 40000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு படிப்படியாக வழங்கப்படும்.
பொதுத்துறையில் அடிப்படை சம்பளம் திருத்தம் செய்யப்பட்டு ஒரு தசாப்தம் கடந்துவிட்டது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.