சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவைக்கு 150 புதிய வாகனங்கள்!
இதற்கான அமைச்சரவை பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக முன்னெடுக்கப்படும் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவைக்காக 150 புதிய வாகனங்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நிலையத்தில் இன்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய திட்டத்தின் கீழ் இந்த அம்பியுலன்ஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.