முடிவுக்கு வரும் ஹர்திக் அதிகாரம்.. ஆசியக் கோப்பை தொடர்.. இந்திய அணி இன்று அறிவிப்பு !
ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.

ஆசியக் கோப்பை தொடர்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்திய அணி அறிவிப்புக்கு பின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை. அந்த வகையில் ராகுல் டிராவிட் பங்கேற்க இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அணித் தேர்வை பொறுத்தவரை டாப் 3 இடங்களில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. சுப்மன் கில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பிடிப்பது நிச்சயம்.
4வது வீரருக்கான ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் காயம் காரணமாக என்சிஏவில் இருப்பதால், அவர்களின் உடற்தகுதியை கணக்கில் கொண்டே அணித் தேர்வு இருக்கப் போகிறது.
தோனியிடம் இருந்து கற்றுக்கொண்டது என்ன ? மகீஷ் தீக்சனா பெருமிதம்!
அதேபோல் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் நிச்சயம் அணியில் இருப்பார்கள். மீதமுள்ள பேக் அப் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான போட்டியில் பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் இருக்கிறார்கள்.
அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கான போட்டியில் குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் அஸ்வின் இருக்கிறார்கள். அதேபோல் ஆல் ரவுண்டர்களுக்கான போட்டியில் அக்சர் படேல், ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.
இதில் யார் யார் தேர்வு செய்யப்பட போகிறார்கள், எந்த வீரருக்கு என்ன இடம் என்பதெல்லாம் இன்று தெரிய வரும். அதே அணி தான் உலக்கோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல உள்ளதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் துணை கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியில் போட்டி இருக்கா? பும்ரா சொன்ன அதிர்ச்சி பதில்.. விளையாடிய விதி