திடீர் சுகவீனம் காரணமாக 14 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு
பாடசாலை முடிந்து தனது வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது கை வலி ஏற்பட்டதாக குறித்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயது மாணவி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரம் 09 மாணவி ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் ஹோமாகம முல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் பாடசாலை முடிந்து தனது வீட்டில் தனது நண்பர்களுடன் படித்துக் கொண்டிருந்த போது கை வலி ஏற்பட்டதாக குறித்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பிறகு அவர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர், சிறுமி ஒருவல மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வைத்தியர்கள் பரிசோதித்த போது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (நியூஸ் வயர்)