ரணிலுடன் இணைய தயாராகும் 11 உறுப்பினர்கள் - வெளியான தகவல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பதினொரு உறுப்பினர்கள் கைகோர்க்க உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்டத்தில் 85 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய பதினொரு பேரைத் தவிர ஏனைய அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உள்ளனர்.
அத்துடன், திகாம்பரம் அணியினரின் செயற்பாடுகளை விரும்பாத மேலும் பதினொரு உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கைகோர்க்க தயாராக உள்ளனர்.
ஜக்கிய மக்கள் சக்தியில் இருந்து 14பேர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் வந்துள்ள நிலையில், இன்னும் ஆறுபேர் மெதுவாக வந்து இணைய உள்ளனர்.
மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ரணிலுக்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், திகாம்பரத்தின் கட்சியில் உள்ளவர்களில் பலர் எம்மோடு இணைந்து கொள்வதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.