ஏப்ரல் மாத சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான தகவல்
ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 30,000 இந்தியர்கள் (Indian nationals) நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (Tourism Development Authority) தரவுகள் தெரிவிக்கின்றன.
வெளியான தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 24 நாட்களில் மொத்தம் 144,320 வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களில், 29,763 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இது 20.6% ஆகும். மேலும், இதுவரை ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,501 பேர், ரஷ்யாவிலிருந்து 11,859 பேர், ஜெர்மனியிலிருந்து 10,374 பேர் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டினர் 9,410 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 866,596 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 148,078 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 105,472 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 85,206 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மார்ச் மாதத்தில் மொத்தம் 229,298 வெளிநாட்டினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர், இது மார்ச் 2024 தரவுகளுடன் ஒப்பிடும்போது 9.62% அதிகமாகும்.