பாடசாலை ஆசிரியர் மீது மாணவனின் தந்தை தாக்குதல்
பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் மீது மாணவனின் தந்தை ஒருவர் இன்று (22) மேற்கொண்ட தாக்குதலில் குறித்த ஆசிரியர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை மலசல கூடத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் வராததால், மாணவனை தேடி குறித்த ஆசிரியர் சென்றுள்ளார்.
அங்கு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்டமையால் மாணவனை ஆசிரியர் விசாரித்த போது மாணவன் அங்கிருந்து தப்பிச் சென்று , தனது தந்தையை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார்.
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை , ஆசிரியர்களின் ஓய்வறையில் இருந்த குறித்த ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் அங்கிருந்து மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

