குளிரால் இரண்டு குழந்தைகள் பலி
குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

குளிர் காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் இரண்டு சிறு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கந்தளாய் ராஜா அல பிரதேசத்தை சேர்ந்த இரண்டரை மாத குழந்தையும் கந்தளாய் பேராறு பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு குழந்தைகளும் நேற்று முன்தினம் (09) அதிகாலை உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் நுரையீரல் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் குளிரின் காரணமாக மூச்சு திணறல் காரணமாக மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.