இலங்கை வருகிறார் பான்கீ மூன்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ – மூன் இலங்கை வரவுள்ளார்.

ஜனவரி 30, 2023 - 00:41
இலங்கை வருகிறார் பான்கீ மூன்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ – மூன் இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் பான் கீ – மூன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.

தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ – மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதுடன் அவரது வருகையின் பின்னர் பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன என்று காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!