மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் - பட்டியல் இணைப்பு

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரி 13, 2023 - 12:36
மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம் -  பட்டியல் இணைப்பு

ஜனவரி 15 ஆம் திகதி முதல் அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், 0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாயிலிருந்து 550 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணமும் 90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணமும் முறையே 650 ரூபாயாகவும் 1500 ரூபாயாகவும் அமைந்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் 1500 ரூபாயாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அலகு 0-30 – 400 ரூபாய்

அலகு 31 -90 – 550 ரூபாய்

அலகு 90-120 – 650 ரூபாய்

அலகு 120 – 180 = 1500 ரூபாய்

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!