கூட்டணியிலிருந்து வேலு குமார் இடைநிறுத்தம்

2023ஆம் ஆண்டுக்கானவரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 9, 2022 - 16:26
கூட்டணியிலிருந்து வேலு குமார் இடைநிறுத்தம்

2023ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், கட்சி உறுப்புரிமையிலிருந்து உடன் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை உறுதிப்படுத்தினார்.

2023ஆம் ஆண்டுக்கானவரவு - செலவுத் திட்டத்தின்  மூன்றாம் வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நேற்று மாலை நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளுந்தரப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன எதிராக வாக்களித்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வேலு குமார் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்தநிலையில், கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், கட்சி உறுப்புரிமையில் இருந்து உடன் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் குறித்த ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சியின் அரசியல் குழு எடுக்கும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணசேன் தெரிவித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!