இளம் பெண் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்
மத்துகம, தொலஹேன பிரதேசத்தில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்துகம, தொலஹேன பிரதேசத்தில் நேற்று (18) பிற்பகல் இளம் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்டவர் அங்கலவத்தை, மேர்வின் சமரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 33 வயதானவர் என மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்களும் காணப்பட்டதுடன், காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த கொலை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.