யாழ். போதனாவில் இரட்டை சிசுக்களை பிரசவித்த இளம் தாய் மரணம்

அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.  அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

நவம்பர் 28, 2023 - 23:31
நவம்பர் 28, 2023 - 23:57
யாழ். போதனாவில் இரட்டை சிசுக்களை பிரசவித்த இளம் தாய் மரணம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் இரட்டை சிசுக்களைப் பிரசவித்த இளம் தாய் மரணித்துள்ளார். 

யாழ்ப்பாணம், தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா (வயது 25) என்ற பெண்ணே இவ்வாறு மரணித்துள்ளார். 

அப்பெண்ணுக்கு, இரட்டை சிசுக்கள் பிறந்து ஓரிரு நாட்களில் அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. 

அம்மை தொற்று பரவும் எனக் கருதிய வைத்தியர்கள், பெண்ணை வீட்டுக்குச் செல்லுமாறு பணித்துள்ளனர்.

தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென உடல் நலக் குறை ஏற்பட்டு, நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்ட  நிலையில் நேற்று (27) மரணித்தார். 

பெண்ணுக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி, நியூமோனியா ஏற்பட்டு, நுரையீரலை பாதித்ததால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. 

மரணித்த பெண்ணின் உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!