பாலியல் உறவு கொள்ளும் வீடியோக்களைப் பகிர்ந்த தம்பதி கைது
பாலியல் உறவு கொள்ளும் நேரத்தில் அதனை அப்படியே வீடியோவாக இணையளத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஜோடி கைதுசெய்யப்பட்டுள்ளது.

பாலியல் உறவு கொள்ளும் நேரத்தில் அதனை அப்படியே வீடியோவாக இணையளத்தளத்தில் பதிவேற்றம் செய்த ஜோடி கைதுசெய்யப்பட்டுள்ளது.
திருமணமான இந்த தம்பதி ஹொரண, கும்புக பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்களை குறிவைத்து சந்தேக நபர்கள் இந்த நேரடி பாலியல் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
23 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (23) ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.