மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! இலங்கையின் நிலை என்ன?

சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: 2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அண்மையில் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 17, 2023 - 12:16
மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! இலங்கையின் நிலை என்ன?

2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அண்மையில் வெளியிட்டுள்ளது.

எந்த நாட்டினுடைய கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதன் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையானது ஒரு குறிப்பிட்ட நாட்டின்  கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், pre - departure விசா விண்ணப்பம் இல்லாமல், எத்தனை நாடுகளுக்கு செல்லலாம் என்பதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதையும் படிங்க: அலைபேசி மற்றும் உபகரணங்களின் விலை  தொடர்பில் அதிர்ச்சி தகவல்

அதனடிப்படையில் இந்த வருடத்தின் இந்த தரவரிசையில்  சிங்கப்பூரின் கடவுச்சீட்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பெற்றுள்ளதுடன் அவுஸ்திரேலியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா, சுவீடன மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: கனடா செல்லும் மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!

இதேவேளை இங்கிலாந்து கடவுசீட்டு 4ஆவது இடத்தையும், அமெரிக்காவின் கடவுச்சீட்டு 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளதுடன் உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இந்தியாவின் கடவுச்சீட்டு 80ஆவது இடத்தை பெற்றுள்ளது.

மேலும் பாகிஸ்தான், இலங்கை,நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் பலவீனமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!