இலங்கைப் பெண்களுக்கு மீண்டும் ஓமானில் ஏற்பட்டுள்ள சிக்கல்
குறித்த பாதுகாப்பு இல்லங்களில், அடிப்படை வசதியேனும் இல்லாதமையால், பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஓமானில் மீட்கப்பட்ட 115 பெண்களும், தற்போது தூதரக பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஓமானில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாதுகாப்பு இல்லங்களில், அடிப்படை வசதியேனும் இல்லாதமையால், பெண்கள் அங்கிருந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை, 115 இலங்கைப் பெண்களில் சுமார் 25 பேரை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.