கேட்பாரற்று கிடந்த சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்.. திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. 

நவம்பர் 20, 2023 - 17:01
கேட்பாரற்று கிடந்த சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்.. திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

மத்திய மும்பை குர்லாவில் உள்ள சாந்தி நகரின் சிஎஸ்டி சாலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று தனியாக கிடந்தது. 

சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. 

ஆனால் அவரது உடலைப் பார்க்கும்போது, அவரது வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவரைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!