நலன்புரி கொடுப்பனவு கிடைக்குமா? வெளியான தகவல்!
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காமையினால் பயனாளிகளுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காமையினால் பயனாளிகளுக்கான கொடுப்பனவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொடுப்பனவை செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை கூட்டப்பட வேண்டும் என சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.
எனினும், தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாமல் போயுள்ளது.
குறித்த சபையின் தலைவராக செயற்பட்ட பி.விஜேரத்ன கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதனடிப்படையில், புதிய தலைவராக ஜயந்த விஜேரத்னவை நியமிக்குமாறு அரசியலமைப்பு பேரவைக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அங்கீகாரத்தை அரசியலமைப்பு பேரவை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.