தேசபந்துவுக்கு பிணை கிடைக்குமா? இல்லையா? இன்று தீர்மானம்

தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 20, 2025 - 14:37
தேசபந்துவுக்கு பிணை கிடைக்குமா? இல்லையா? இன்று தீர்மானம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர் நேற்று (19) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அதன்படி, சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து, தேசபந்து தென்னகோன் நேற்று சிறப்புப் பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!