சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா சாமரி?

தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 20, 2024 - 11:35
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா சாமரி?

தனது கிரிக்கெட் பிரியாவிடை மிக விரைவில் நடைபெறும் என இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் சாமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் தனது அணியை இறுதி சுற்றுக்கு தகுதி பெற வைப்பதே தனது இலக்கு என்றார்.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தின் போது இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20-20 தொடரை 2-1 என கைப்பற்றி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

கடைசி ஒரு நாள் போட்டியில் சாமரி அதபத்து ஆட்டமிழக்காமல் 195 ரன்கள் குவித்து இலங்கை அணியை சாதனைகளுக்குள் உயர்த்தினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!