நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
வெப்பம் மிகுந்துள்ள நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது அதிக வெப்பம் நிலவுவதால் வயது வந்தோர் 3 லீற்றர் நீரையும் சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும் குடிப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு போதுமான அளவு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.
வெப்பம் மிகுந்துள்ள நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீருக்கு மேலதிகமாக தர்பூசணி, தோடம்பழம் போன்ற நீர் சத்துக்களை கொண்ட பழங்களை சாப்பிடுவதும் பொருத்தமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெப்பம் மற்றும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ளுவதுடன், வெளியில் செல்வோர் தண்ணீர் எடுத்துச் செல்வது பொருத்தமானது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.