2ஆவது ஒருநாள் போட்டி.. மழையால் இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ள அதிஷ்டம்
இலங்கை இந்தியா அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

இலங்கை இந்தியா அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்த தொடரின் மூன்று போட்டிகளும் கொழும்பில் நடக்கின்றன. முதல் போட்டியை போல, இரண்டாவது போட்டியிலும் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்து இருக்கின்ற நிலையில், இலங்கை மற்றும் இந்திய அணிகளில் ஒரு அணி தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற வேண்டும்.
ஒருவேளை அடுத்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், மூன்றாவது போட்டியை வென்றாக வேண்டும்.
ஒருவேளை இன்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஒரு போட்டியை மட்டும் வென்று தொடரை கைப்பற்றுவது இலங்கை அணிக்கு இப்போதைக்கு எளிதானதாக இருக்கும்.
எனவே, மழையால் போட்டி கைவிடப்பட்டால் அது இலங்கை அணிக்கு சாதகமாக அமையும்.
போட்டிக்கு முன்பாக மதியம் 12 மணி அளவில் 38% மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என வானிலை அறிக்கை கூறுகிறது.
அதே சமயத்தில் மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 41% முதல் 63 சதவீதம் வரை காணப்படுகின்றது.