வறட்சியான காலநிலையில் திடீர் மாற்றம்; வெளியான அறிவிப்பு
நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
கிழக்கு கரையோரப் பகுதிகளில் இன்று (09) ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.