கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை
காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று (29) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.
கொழும்பு, தெஹிவளை, கோட்டே, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ உள்ளிட்ட பகுதிகளில் நீர் வழங்கல் பாதிக்கப்படும்.
மேலும், மொரட்டுவ மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு அமைப்பின் அத்தியாவசியமான புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு ஏற்பட்டுள்ளது.