கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 6, 2023 - 18:08
கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை சனிக்கிழமை (07) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (08) காலை 8 மணி வரை  நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 11, 12, 13 மற்றும் கொழும்பு 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!