கடல் மார்க்கமாக புலம்பெயர்வோருக்கு வெளியான எச்சரிக்கை

படகிலோ அல்லது சிறய கப்பலிலோ செல்லும் பயணிகள் இடைநடுவில் உயிரிழந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 10, 2024 - 11:51
கடல் மார்க்கமாக புலம்பெயர்வோருக்கு வெளியான எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாக புலம்பெயரும் நபர்கள் அதிக உயிர் ஆபத்துக்களை சந்தித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படகிலோ அல்லது சிறய கப்பலிலோ செல்லும் பயணிகள் இடைநடுவில் உயிரிழந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அளவுக்கதிகமான எண்ணிக்கையிலான பயணிகள் ஒரே படகில் செல்வதனால் அவை மூழ்கி விபத்துக்குள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

கடந்த ஆண்டு மட்டும் ஸ்பெயின் நாட்டுக்கு கடல் வழி மார்க்கமாக வர முயன்றவர்களில் 6,600க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீட்கப்பட்டவர்களின் தரவுகள்படி இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலிருந்தும் பல்வேறு நாடுகளுக்கு கடல் மார்க்கமாக செல்வதற்கு பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இதனால், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தற்போது வரை எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!