தரமற்ற தேங்காய் எண்ணெய் குறித்து வெளியான எச்சரிக்கை
விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்ற அமர்வின் போது இதனைக் கூறியுள்ளார்.

பண்டிகை காலத்தில் சந்தையில் தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்பட்டால் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்ற அமர்வின் போது இதனைக் கூறியுள்ளார்.
சிறிய ஆலை உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் தரமற்ற எண்ணெய் விற்பனை செய்யப்படுவதுடன், இவ்வாறு விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றது.
எனவே, உற்பத்திகளை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்கும் போது இது குறித்து நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.