சுவர் இடிந்து விழுந்து இளம் தாய் மரணம்; தந்தையும் குழந்தையும் படுகாயம்

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குறித்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஜனவரி 11, 2024 - 18:51
சுவர் இடிந்து விழுந்து இளம் தாய் மரணம்; தந்தையும் குழந்தையும் படுகாயம்

வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய இளம் தாய் மரணித்துள்ளார். 

பொலனறுவை, ஹிங்குராங்கொடை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அவரது கணவரும் ஒன்றரை வயது குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக குறித்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!