இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானதுடன், மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானதுடன், மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
நீதியாகவும், சுதந்திரமாகவும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிப்பதற்குரிய அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், வாக்காளர்கள் அனைவரும் தமது ஜனநாயகக் கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, வாக்களிப்பு நேரம் மற்றும் அதன் பின்னரான காலப் பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகளில் அலைபேசி பயன்படுத்துதல், புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்தல், துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது, புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற சட்டவிரோதச் செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் பின்வரும் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்:
- தேசிய அடையாள அட்டை (NIC)
- செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
- செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
- மூத்த குடிமக்களின் அடையாள அட்டை
- அரசு ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டை
- மதகுருமார்களுக்கான அடையாள அட்டை
- தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை