ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக 4ஆவது முறையாக தெரிவான கோலி
அமெரிக்காவில் இடம்பெற்ற ஐசிசியின் நிகழ்வில் விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை கோலிக்கு வழங்கி ஐசிசி வழங்கியது.

சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் வழங்கும் வருடாந்த விருது வழங்கல் விழாவில் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்ற விருது 4ஆவது முறையாக விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற ஐசிசியின் நிகழ்வில் விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை கோலிக்கு வழங்கி ஐசிசி வழங்கியது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
விராட் கோலி கடந்த வருடத்தில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ஓட்டங்களை குவித்துள்ளார்.இதில் 6 சதம், 8 அரை சதம் என்பன உள்ளடங்கும்.
அத்துடன், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் கோலி சிறப்பாக செயல்பட்டிருந்தார்.