பயிற்சியாளராக மாறிய விராட் கோலி.. புதிய பொறுப்பா?

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தொடருக்கு 10 நாட்களுக்கு முன்பே அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஜுலை 6, 2023 - 16:43
ஜுலை 6, 2023 - 17:19
பயிற்சியாளராக மாறிய விராட் கோலி.. புதிய பொறுப்பா?

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தொடருக்கு 10 நாட்களுக்கு முன்பே அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த தொடரில் புஜாரா இல்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேபோன்று ருத்ராஜ் கெய்க்வாட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரர்கள் பார்பிடாசின் முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர். 
அப்போது விராட் கோலி பேட்டிங் பயிற்சியை முடித்துவிட்டு மற்ற வீரர்கள் பயிற்சி செய்வதை கவனித்தார். 

அப்போது ஜெய்ஷ்வால் பிரண்ட் புட் எடுத்து ஆடுவதில் தவறு செய்ததை கவனித்த விராட் கோலி அவரை அழைத்து பிரண்ட் புட் எடுத்து எப்படி ஆட வேண்டும். எந்த மாதிரி பந்துவீச்சுக்கு பிரண்ட் புட்டை பயன்படுத்த வேண்டும். ஃபிரண்ட் ஃபுட் பயன்படுத்தும் போது பேட்டிற்கும் பேடுக்கும் தூரம் இருக்கக் கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினார். 

இதே போன்று சுப்மன் கில்லுக்கும் விராட் கோலி தனி கவனம் செலுத்தி பயிற்சியில் சில மாற்றங்களை செய்தார். இதனை பார்த்ததும் விராட் கோலி ஏன் திடீரென்று பேட்டிங் பயிற்சியாளராக மாறிவிட்டார் என்ற ரசிகர்களுக்கு சந்தேகம் வந்தது.

தற்போது இந்திய அணியில் இளம் வீரர்களின் வருகை தொடங்கிவிட்டது. இளம் வீரர்கள் தான் அடுத்த கட்டத்திற்கு இந்திய அணியை கொண்டு செல்ல வேண்டும். இதனால் இந்திய அணி வீரர்களின் பேட்டிங் நுணுக்கங்களை பயிற்சியாளர் பார்த்துக் கொள்ளட்டும் என்று இல்லாமல் அணியின் சீனியரான விராட் கோலி கவனித்து அதனை சரி செய்து இருக்கிறார்.

மேலும் ராகுல் டிராவிட் ,விராட் கோலி,ரகானே போன்ற சீனியர்களிடம் சில வீரர்களை கவனித்துக் கொள்ளுமாறு சில பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இதன் மூலம் அணியில் நல்ல ஒற்றுமை நிகழ்வதோடு சீனியர்களின் பொறுப்பும் அதிகரிக்கும். இதனால்தான் டிராவிட் இவ்வாறு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!