குணத்தை பிரதீப் மாற்றிக் கொள்ள வேண்டும்.. வருத்தத்துடன் பதிவிட்ட கூல் சுரேஷ்!
கடந்த வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா, கானா பாலா உள்ளிட்ட 5 பேர் போட்டியில் நுழைந்துள்ளனர். இவர்களில் பேச்சாளர் அன்னபாரதி குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் ஆகியுள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 36வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.
இதுவரை 7 பேர் வெளியேறியுள்ளனர். இதில் பவா செல்லதுரை தானே விரும்பி வெளியேறினார். வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நிலையில், அதில் பேச்சாளர் அன்னபாரதியும் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ், அர்ச்சனா, கானா பாலா உள்ளிட்ட 5 பேர் போட்டியில் நுழைந்துள்ளனர். இவர்களில் பேச்சாளர் அன்னபாரதி குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட் ஆகியுள்ளார்.
இதனிடையே நேற்றைய தினம் ரெட்கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த எலிமினேஷன் விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றுள்ளது. பிரதீப்பால் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்மீது விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் அதிகமான வாக்குவாதங்கள், பிரச்சினைகளில் சிக்கினார் பிரதீப். குறிப்பாக கூல் சுரேஷ், விஷ்ணு, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு எலிமினேட் ஆன விஜய் வர்மா உள்ளிட்டவர்களுடன் அதிகமான பிரச்சினைகள் பிரதீப்பிற்கு ஏற்பட்டது.
இதனிடையே அவர் தற்போது எலிமினேட் ஆகியுள்ளது குறித்து பிக்பாஸ் வீட்டிலிருந்தே தன்னுடைய வேதனையை பகிர்ந்துள்ளார். தான் பர்சனலாக பிரதீப்பை வெறுக்கவில்லை என்றும் அவரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அப்பாவும் பிரதீப் போலத்தான் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று வாழ்ந்தவர், அதனால் அவர் கடைசி காலத்தில் எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால் பிரதீப் தன்னுடைய குணத்தை சிறிது மாற்றிக் கொள்ள வேண்டும என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு காரணம், தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு புது மனிதனாக வெளியே செல்ல வேண்டும என்பதே என்று குறிப்பிட்டுள்ள கூல் சுரேஷ், அதனால்தான் பிரதீப் தன்னிடம் தவறாக பேசினாலும் தான் அதற்கு எதிராக எதையும் அதிகமாக செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
பிரதீப் இல்லாதது தனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் வெளியே போனதற்கு தான் காரணம் இல்லை என்றும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தான் அடுத்த வாரம் அல்லது அதற்கடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விடுவேன் என்று கூறியுள்ள கூல் சுரேஷ், தனக்கு சரியான மனநிலை இல்லை என்றும் தன்னுடைய பேமிலியை மிஸ் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவுடன் தன்னுடைய வீட்டிற்கு பிரதீப் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கூல் சுரேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். எதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.