சுக்கிரன் பெயர்ச்சியால் பணம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார் சுக்கிரன்.

ஜோதிடத்தின் படி, சுக்கிரன் மிகவும் சுப கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் அரசனைப் போல வாழ்க்கையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
இது தவிர, சுக்கிரனின் நிலையில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களிலும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக காதல், திருமண வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுவார் சுக்கிரன்.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுக்கிரன் பூரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதாயம் கிடைக்கும். அனைத்தும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியை உண்டாகும். எனவே அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம். வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். அதனுடன் வியாபாரத்தை விரிவுப் படுத்துவீர்கள். வெளியூர் பயணம் மேற்கவலவீர்கள். செல்வம் பெருகும். உங்களின் அனைத்து ஆசைகளும் மகிழ்ச்சியுடன் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் இருந்து பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலையால் த்ருப்தி அடைந்து மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும், இதனால் நிதி நிலை முன்னேற்றம் அடையும். பதவி உயர்வு பெறலாம். பொருளாதார அம்சம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். அதிர்ஷ்டம் வாய்ப்புகள் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் நம்பிக்கை அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சாதகமாக நடக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவீர்கள். செல்வ செழிப்பு உண்டாகும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.