வாகன இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்... வெளியான தவல்

இலகு ரக வாகனங்களை கொள்வனவு செய்ய மீண்டும் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகள் பெய்யானவை

ஜனவரி 10, 2024 - 11:47
வாகன இறக்குமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்... வெளியான தவல்

போதிய அந்நிய செலாவணி நாட்டில் இல்லாததன் காரணமாகவே வாகனங்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாக என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலகு ரக வாகனங்களை கொள்வனவு செய்ய மீண்டும் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகள் பெய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்குத் தேவையான அந்நிய செலாவணி எம்மிடத்தில் இல்லை.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் நாம் அனைத்தையும் இறக்குமதி செய்வதற்கு வேண்டுமாயின் டொலர் கிடைப்பதற்கான வேலைத்திட்டம் வேண்டும்.

எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாகவே அரசாங்கத்தைகொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!