குறைந்த விலையில் வாகன இறக்குமதி? வெளியான தகவல்!
2017 ஆண்டுக்குரிய விட்ஸ் ரக கார்களை ஜப்பானில் இருந்து 10 - 12 இலட்சம் ரூபாய்க்கு இலங்கைக்கு கொண்டுவர முடியும்.

டொலர் வெளியில் செல்லாமல் ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”அண்மையில் ஜனாதிபதி ஜப்பான் சென்றிருந்த போது, வாகன இறக்குமதியாளர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இதன்போது தற்போதைய சூழ்நிலையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது என்றும், நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஆனால் நாங்கள் இந்த துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டவர்கள். டொலர் வெளியில் செல்லாமல் ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குதி செய்ய முடியும்.
அத்துடன், ஜப்பானில் இருந்து வாகனங்களை 70 சதவீத விலைக்கழிவுடன் இறக்குமதி செய்ய முடியும்.
உதாரணமாக இலங்கையில் தற்போதுள்ள 2017 ஆண்டுக்குரிய விட்ஸ் ரக கார்களை ஜப்பானில் இருந்து 10 - 12 இலட்சம் ரூபாய்க்கு இலங்கைக்கு கொண்டுவர முடியும்.
இதனால் மிகக்குறைந்த விலைகளில் வாகனங்களை இலங்கையில் விற்பனை செய்ய முடியும். எனவே அரசாங்கம் எங்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.