எஞ்சிய போட்டிகளில் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார்
இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது 10ஆவது ஓவரை வீசும்போது இடது காலில் காயம் ஏற்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று (03) இரவு அறிவித்தது.
இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது 10ஆவது ஓவரை வீசும்போது இடது காலில் காயம் ஏற்பட்டது.
ஹசரங்கவுக்கு பதிலாக ஜெஃப்ரி வான்டர்சே அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.