சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

ஜுன் 20, 2023 - 17:16
ஜுன் 20, 2023 - 17:58
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் 

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க, சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அச்சடிக்கும் அட்டைகள் பற்றாக்குறையால் தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் பாதுகாப்பு குறியீடு மற்றும் ஒரு வருட செல்லுபடியாகும் காலத்துடன் வழங்கப்பட்டன.

சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 800,000 அட்டைகளை  இன்னும் அச்சிட வேண்டும்.

நாளாந்தம் 4,000 அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!