காப்புரிமை மீறல்: ஆப்பிளுக்கு ரூ.5,622 கோடி அபராதம் விதிப்பு
ஆப்பிள் நிறுவனத்திற்கு காப்புரிமை மீறல் வழக்கில் ரூ.5,622 கோடி (634 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு காப்புரிமை மீறல் வழக்கில் ரூ.5,622 கோடி (634 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மருத்துவ சாதன உற்பத்தியாளரான மாசிமோ கார்ப்பரேஷன், ஆப்பிள் வாட்ச்களில் உள்ள இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு (Blood Oxygen Monitoring) தொழில்நுட்பம் தங்களது காப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற கலிபோர்னிய கூட்டாட்சி நீதிமன்றம், 2020–2022 இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட 43 மில்லியன் ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு ஆப்பிள் இழப்பீடு செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
மாசிமோ, இது தங்களது அறிவுசார் சொத்து உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய வெற்றி என தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
2023-ல் ITC சில ஆப்பிள் வாட்ச் மாடல்களின் இறக்குமதியை தடை செய்தது. இதன் காரணமாக, ஆப்பிள் இரத்த ஆக்ஸிஜன் அம்சத்தை நீக்கி புதுப்பித்த மாடல்களை வெளியிட்டது.