இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ, கிட்டிகொட பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 5 அடிக்கு மேல் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் மரணத்துக்கான காரணம் மற்றும் அடையாளம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.