ரயிலில் மோதி இரண்டு இளைஞர்கள் பலி
ரயில் பயணித்த நடந்து சென்ற நிலையில், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வெயங்கொட, வந்துராவ பகுதியில் ரயிலில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளனர்.
ரயில் பயணித்த நடந்து சென்ற நிலையில், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களின் சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.