டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட தேடப்படும் குற்றவாளிகள்
இலங்கையில் நடத்தப்பட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் கொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைச் செய்து டுபாயில் பதுங்கியிருந்த இரண்டு இலங்கையர்கள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (12) அதிகாலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கொழும்பு, நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான களுதுர தினேஷ் சமந்த டி சில்வா என அழைக்கப்படும் "பாபி" மற்றும் 26 வயதான கங்கனம்ல திமுத்து சதுரங்க பெரேரா ஆகிய மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 05.10 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடத்தப்பட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகள் தொடர்பாக இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.