மின் கம்பியில் ரதம் மோதியதில் இருவர் உயிரிழப்பு... நமுனுகலையில் சோகம்

பூட்டாவத்தையில் இருந்து மாதுளாவத்தை பகுதிக்கு நேற்றிரவு சென்ற ரதம், இன்று காலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 24, 2023 - 15:37
மின் கம்பியில் ரதம் மோதியதில் இருவர் உயிரிழப்பு... நமுனுகலையில் சோகம்

பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் பவனி வந்துகொண்டிருந்த ரதம், மின் இணைப்பு கம்பியில் மோதியதால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.

பூட்டாவத்தையில் இருந்து மாதுளாவத்தை பகுதிக்கு நேற்றிரவு சென்ற ரதம், இன்று காலை மீண்டும் ஆலயத்திற்கு திரும்பும் வழியிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இவ் அனர்த்தத்தில் 27 மற்றும் 37 வயதுடைய உயிரிழந்துள்ளதாக பசறை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரணித்த இருவரும் பூட்டாவத்தை பகுதியை சேர்ந்தவர்கள் என நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்

சடலம் பசறை வைத்திய சாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

இச்சம்பவத்தில் காயமடைந்த 30, 57, 43, வயதுடைய மூவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை நமுனுகுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ராமு தனராஜா

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!