நாட்டின் இரண்டு பகுதிகளில் இரண்டு கொலைகள்
கோப்பாய் மற்றும் அத்கல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன.

கோப்பாய் மற்றும் அத்கல பொலிஸ் பிரிவுகளில் இரண்டு கொலைகள் பதிவாகியுள்ளன.
நேற்று (12) இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோப்பாய் ஜி.பி.எஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் காளி கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றில் ஒருவர் இரத்தக் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கோப்பாய் தெற்கில் வசிக்கும் 52 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில், மழுங்கிய ஆயுதம் போன்றவற்றால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதேவேளை, அத்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொஸ்கொல்ல பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த 69 வயதுடைய சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.