வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்! சாத்தியமானது எப்படி?

இரண்டு குழந்தைகளுடன் தாயும் பூரண நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜனவரி 7, 2024 - 00:20
வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்! சாத்தியமானது எப்படி?

பொதுவாக ஒரே நாள், ஒரே திகதி மற்றும் ஒரே வருடத்திலேயே இரட்டை குழந்தைகள் பிறக்கும். ஆனால் அமெரிக்காவில் திகதி, வாரம் மற்றும் ஆண்டு முற்றிலும் வேறுபட்டு  இரட்டையர் பிறந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த புத்தாண்டு தினத்தில் 40 நிமிட இடைவெளியில் பெண் ஒருவர் இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். இந்த இரட்டையர்கள் வெறும் 40 நிமிட இடைவெளியில் பிறந்தாலும், அவர்களின் பிறந்த திகதி, ஆண்டு, வாரம் மற்றும் நேரம் முற்றிலும் வேறுபட்டவையாக உள்ளன.

நியூஜெர்சியில் வசிக்கும் பில்லி ஹம்ப்ரி மற்றும் அவரது மனைவி ஈவ் ஆகியோர் புத்தாண்டு தினத்தன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

30 வருடத்துக்கு முன் திருடப்பட்ட கைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமி!

டிசெம்பர் 31, 2023 அன்று இரவு 11:48 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் எஸ்ரா. ஜனவரி 1, 2024 அன்று அதிகாலை 12:28 மணிக்கு மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் எசேக்கியேல்.

இரண்டு குழந்தைகளுடன் தாயும் பூரண நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது மிகவும் த்ரில்லாக இருந்தது என கணவர் பில்லி ஹம்ப்ரி கூறியுள்ளார்.

இப்போது எங்கு சென்றாலும், இரட்டைக் குழந்தையாகப் பிறந்ததாகச் சொன்னால், ஒரே நாளில் பிறந்தவர்கள் என்ற விவரங்களை எழுத முயல்கிறார்கள். ஆனால் இவர்களின் திகதி, நேரம் மற்றும் ஆண்டு அனைத்தும் வேறுபட்டதாக இருக்கும்” என, பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!