30 வருடத்துக்கு முன் திருடப்பட்ட கைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமி!

கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை கண்டுள்ளார்.

ஜனவரி 6, 2024 - 23:49
30 வருடத்துக்கு முன் திருடப்பட்ட கைப்பையை உரிமையாளரிடம் ஒப்படைத்த சிறுமி!

பிரித்தானியாவில், மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை கண்டுள்ளார்.

இதையடுத்து பையின் மேலே உள்ள அடையாளங்கள் மற்றும் அதில் இருந்த சில பொருட்களை வைத்து சமூக ஊடகங்களில் கைப்பையின் உரிமையாளரை  அந்த சிறுமி தேடி உள்ளார்.

இதையும் படிங்க: குரு பெயர்ச்சி 2024: இந்த ராசிகளுக்கு சாதகமாக செயற்படும் குரு... உங்க ராசி என்ன?

நீண்ட தேடலுக்கு பிறகு, கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி-யிடம் சிறுமி  கைப்பையை ஒப்படைத்தும் உள்ளார்.

“நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை, இத்தனை வருடங்களுக்கு பிறகும் பை அப்படியே உள்ளது” என கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி தெரிவித்துள்ளார்.

30 வருடங்களுக்கு முன்பு ஆட்ரி ஹே என்பவரின் கைப்பை திருடப்பட்டுள்ளதுடன், அந்த கைப்பையில் இருந்த 200 பவுண்ட் பணத்தை எடுத்துக்கொண்டு திருடன் கைப்பையை டான் நதியில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!